சரும பராமரிப்பு கை கொடுக்கும் மாதுளை

30 Mar, 2025 | 02:19 PM
image

எல்லாப் பழங்களுமே ஆரோக்கியத்துடன் சேர்த்து அழகையும் பராமரிக்க உதவுகின்றது.  அந்த வகையில் அதிக சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள மாதுளம்பழமும் அழகுக்கு அழகு சேர்க்கும்.

அந்த வகையில் மாதுளை ஜூஸூடன் சிறிதளவு சந்தனத்தைக் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும். 

மாதுளம்பழ விழுதையும் பட்டரையும் தலா ஒரு தேக்கரணடி எடுத்து குழைத்து முகத்திலோ அல்லது எங்கெல்லாம் தோல் சுருங்கியிருக்கிறதோ அந்தப் பகுதிகளில் பூசி வந்தால் சுருக்கங்கள் நீங்கும். 

திறக்க முடியாத அளவுக்கு கண்கள் பொங்கி வந்தால், மாதுளம் பழத்தை நான்காக வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து ஆறியதும் அந்தத் தண்ணீரினால் கண்களைக் கழுவ வேண்டும். கண் பொங்குவது உடனே சரியாகும். 

மாதுளை ஜூஸூடன் ஒரு தேக்கரண்டி வெட்டிவேர பவுடரையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் நீங்கும். 

ஒரு தேக்கரண்டி பயற்றம் மா, மாதுளம் பவுடர் சிறிதளவு, அரை தேக்கரண்டி எலுமிச்சம் சாறு கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் பூசி, காய்ந்த பின்னர் கழுவ வேண்டும். தொடர்ந்து வாரத்தில் இரண்டு, மூன்று தடவைகள் இதனை செய்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right