நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ அல்லது வேலைத்திட்டமோ அரசாங்கத்திடம் இல்லை - எதிர்க்கட்சித் தலைவர்

29 Mar, 2025 | 08:11 PM
image

வளமான நாட்டை உருவாக்குவோம் என்று கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த  தேசிய மக்கள் சக்திக்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ, வேலைத்திட்டமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களுடன்  வெள்ளிக்கிழமை (28)  இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த காலங்களில் நாட்டின் சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி, கொள்ளை போன்ற பல பிரச்சினைகள் காணப்பட்டன. தரம் குறைந்த மருந்துகளால் பலரின் உயிர்கள் பறிபேனது.

இன்றும் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு அரசாங்கத்திடம் தீர்வில்லை. இதற்கான ஏற்பாடுகள் கூட காண்பதற்கில்லை.

ஆஸ்துமா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் மருந்து, நுரையீரல் தொற்றுக்கு வழங்கப்படும் மருந்து, நிமோனியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் பாக்டீரியா தொற்றுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் ஆணையை வழங்கி, 225 பேரில் 159 பேரோடு  பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியது  இவ்வாறான மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கல்ல. 

மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், அரசாங்கமானது இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வளமான நாட்டை உருவாக்குவோம் என்று கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தனர். ஆனால் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ, வேலைத்திட்டமோ, பாதை வரைபடமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை. நாட்டை நிர்வகிக்க முடியாத, இயலுமையற்ற அரசாங்கமே தற்போது காணப்படுகின்றது.

வேலையில்லாப் பட்டதாரிகள் வேலை கேட்கும் போது அமைச்சர்கள் அவர்களை கேலி செய்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவிய வேலையற்ற பட்டதாரிகள் இறுதியில் வைத்தியசாலை செல்லும் அளவிற்கு அரசாங்கத்தின் அடாவடித்தனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னராவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45