சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்­திய அணி பாகிஸ்­தா­னுடன் தோற்­றதன் மூலம் ஒருநாள் அணி­க­ளுக்­கான ஐ.சி.சி. தர­வ­ரி­சையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

இந்­தி­யாவை வீழ்த்தி சம்­பியன்ஸ் கிண்­ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி எட்­டா­வது இடத்­தி­லி­ருந்து இரண்டு இடங்கள் முன்­னேறி ஆறா­வது இடத்தைப் பிடித்­துக்­கொண்­டது. இலங்கை அணி எட்­டா­வது இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

மறு­மு­னையில் பங்­க­ளாதேஷ், இலங்­கையை விட ஒரு படி முன்­னேறி 7ஆவது இடத்­திற்கு சென்­றுள்­ளது.

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இந்தப் போட்டி முடிந்­த­வுடன் வெளி­யி­டப்­பட்ட ஒருநாள் அணி­க­ளுக்­கான தர­வ­ரிசைப்படி தென்­னா­பி­ரிக்க அணி தொடர்ந்தும் முத­லி­டத்தில் நீடிக்­கி­றது.

தரவரிசையில் முறையே 2) அவுஸ்­தி­ரே­லியா, 3) இந்­தியா, 4) இங்­கி­லாந்து, 5) நியூ­ஸி­லாந்து, 6)பாகிஸ்தான், 7) பங்­க­ளாதேஷ், 8) இலங்கை, 9)  மேற்கிந்தியத் தீவுகள், 10) ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இருக்கின்றன.