bestweb

“அதிகரிக்கும் வெயில்” ஆடைகளில் கவனம் வேண்டும் !

Published By: Digital Desk 2

29 Mar, 2025 | 02:47 PM
image

தற்போது வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இதனால், உடல் உபாதைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. ஆகவே நாம், நடைமுறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

முக்கியமாக, கோடைக்கால உபாதைகளை தவிர்த்துக் கொள்வதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ச்சியாக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வதுடன், சன் ஸ்கிரீன் போன்ற சரும பாதுகாப்புக்களையும் பின்பற்ற வேண்டியுள்ளது.

அடுத்து ஆடை அணிவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கோடை காலத்திற்கு ஏற்ப பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவறுத்தப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக, கறுப்பு மற்றும் அடர் நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டுமாம். உண்மையில் கறுப்பு உடை அணிந்தால் உடல் வெப்பம் ஆகுமா என்பது குறித்து மருத்துவர்கள் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்கள். 

பொதுவாக அனைத்து துணிகளும் உடலால் வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சை ஓரளவு உள்வாங்கிக் கொள்கின்றன. இது குளிர்காலத்தில் நம்மை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் வெப்ப நாட்களில் இது உகந்ததாக நமக்கு இல்லை.

ஆகவே, பருத்தி, நைலோன் போன்ற ஓரளவு காற்று உட்புகும் ஆடை வகைகளை அணிவது அவசியம். இவை வியர்வை மற்றும் வெப்பத்தை வெளியேற்ற அனுமதிக்கின்றன. 

மேலும், வெளிர் நிறங்களிளான ஆடைத் தெரிவென்பது மிகவும் சிறந்தது. காரணம், வெள்ளை நிறம், கறுப்பு நிறத்தைப்போல ஒளியை உறிஞ்சுவதற்கு பதிலாக அப்படியே பிரதிபலிக்கிறது. 

அதேசமயம், சூரியனிடமிருந்து மட்டுமல்லாது நம் உடலில் இருந்து வரும் வெப்பத்தையும் கூட, வெளிர் நிற ஆடைகள் அப்படியே திரும்ப பிரதிபலிக்கின்றனவாம்.

அதனால், இந்த வெயில் காலத்தில் ஓரளவுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள தளர்வான ஆடைகளையும், வெள்ளை நிற ஆடைகளையும் அணிவது நல்லது. தளர்வான, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வையை வெளியேற்றவும் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56
news-image

சிறுநீர் வழியாக சீழ் வெளியேறினால் அதற்கான...

2025-06-21 16:45:30