செல்வ வளத்தை குவிப்பதற்கான பிரத்யேக மந்திர பாராயண வழிபாடு

29 Mar, 2025 | 02:41 PM
image

தொழில் செய்து வருவாய் ஈட்டும் பிரிவினராக இருந்தாலும் வேலை செய்து சம்பளம் பெறுபவர்களாக இருந்தாலும் சரி உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தாலும் செல்வ வளம் என்பது உயர வேண்டுமே தவிர தேக்கம் அடைவதையோ குறைவதையோ விரும்புவதில்லை.

செல்வ வளம் அவர்களுடைய பணப்பெட்டியிலோ அல்லது வங்கியின் கணக்குகளிலோ அல்லது காணியாகவோ இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புவார்கள்.

இந்தத் தருணத்தில் செல்வ வளம் குறையாதிருக்க வேண்டும் என்றால், எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல சூட்சமமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் இவர்கள் அன்னபூர்ணா ஸ்தோத்திரம் எனும் ஒரு மந்திரத்தை உச்சரித்தால் பலன் உண்டு என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த பிரத்யேக மந்திரத்தை  இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வீடுகளிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது விற்பனை நிலையத்திலோ ஒலிக்கச் செய்யலாம். 

ஒலிக்கச் செய்வதுடன் அதனை உச்சரிக்கலாம். உச்சரிக்க பழகிய பின் நாளாந்தம் காலையில் நீராடிய பிறகு பூஜை அறையில் இறை வணக்கத்தை செலுத்தும்போது இந்த அன்னபூர்ணா மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் குறையாது இருக்கும்.

அன்னபூர்ணா மந்திரத்தை உச்சரிக்க மறந்தாலோ அல்லது ஒலிக்கச் செய்வதை தவறவிட்டாலோ அன்றைய தினம் யாருக்கேனும் ஒரு நபருக்கு அன்னதானம் செய்தால், பரிபூரண பலன் கிடைக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

செல்வ வளம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்துடன் விநாயகர் மந்திரத்தையும் சேர்த்து உச்சரிக்க தொடங்கினால் உங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் மறைமுகமான தடை விலகி வருவாய் வருவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான...

2026-02-13 14:50:37
news-image

செவ்வாய் தோஷத்தை நீக்கும் பிரத்யேக வழிபாடு

2026-02-12 14:48:42
news-image

வீட்டில் உள்ள எதிர்மறையான தாக்கத்தை நீக்குவது...

2026-02-11 17:08:28
news-image

ஆடைகளில் தீப்பொறி பட்டால்...!?

2026-02-10 16:19:39
news-image

அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் அற்புத ஆன்மீகப் பொருள்..!?

2026-02-09 18:22:20
news-image

வேலைக்கு செல்லும் பெண்களின் தற்காப்பிற்குரிய பிரத்யேக...

2026-02-07 15:12:42
news-image

புதன் பகவானின் ஆசியை பெறுவதற்கான பிரத்யேக...

2026-02-06 16:50:17
news-image

சனியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் பிரத்யேக மூலிகை

2026-02-05 16:05:14
news-image

பரிகாரங்கள் பலனளிப்பதற்கான சூட்சும விதிகள்!

2026-02-04 15:08:13
news-image

வெற்றிகளை அள்ளித் தரும் பிரத்யேக மந்திர...

2026-02-04 04:11:27
news-image

செல்வ வளத்தை மேம்படுத்தும் பிரத்யேக குறிப்பு

2026-02-02 15:21:34
news-image

பெப்ரவரி மாத ராசி பலன்கள் -...

2026-02-02 08:51:22