பால்ய வயதினர் முதல் அனைத்து வயதினரும் கைபேசி, மடிக் கணினி போன்ற இலத்திரனியல் சாதனங்களை இயக்குவது என்பது இயல்பாகிவிட்டது. இதனுள் சிலர் இத்தகைய பாவனையை நாளாந்தம் குறிப்பிட்ட அளவைக் கடந்து அதிகமாக பாவிப்பதால் கட்டைவிரல் மற்றும் அதன் தொடர்பான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வலி உண்டாகிறது.
இதற்கு தற்போது நவீன அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கட்டை விரலில் வலி, கட்டை விரலை அசைப்பதில் அசௌகரியம், கட்டை விரலின் அடிப்பகுதியில் வலி மற்றும் வீக்கம், ஒரு பொருளை உறுதியாக பற்றும்போது அசௌகரிய உணர்வை உணர்தல், கட்டை விரலை உபயோகப்படுத்தும்போது வித்தியாசமாக உணர்வது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு மருத்துவ மொழியில் வரையறுக்கப்பட்டிருக்கும் டி குவெர்வைன் டெனோசினோவிடிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
உங்களுடைய கட்டைவிரலை உபயோகப்படுத்தும்போது கடுமையான வலி ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து சிகிச்சையும் ஆலோசனையும் பெற வேண்டும்.
கட்டை விரல்களில் உள்ள தசை நாண்கள் பகுதியில் ஏற்படும் பலவீனம், சிதைவு, சேதம் என பல காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் வீடியோ கேம்ஸ், தோட்ட வேலை என மணிக்கட்டு அசைவு தொடர்பான பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
முடக்குவாதம், மணிக்கட்டு அல்லது கட்டை விரலில் உள்ள தசை நாண்கள் மீது நேரடியாக காயம் ஏற்படுவது, கருவுற்றிருக்கும் காலத்தில் ஹோர்மோன் சுரப்பியில் ஏற்படும் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை ஆகிய காரணங்களாலும் கூட இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
வைத்தியர்கள் எக்ஸ்ரே பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்குவர்.
மேலும் வலி நிவாரணத்திற்காக பிரத்யேக உறையை அணிய வேண்டும் என்றும் பரிந்துரைப்பார்கள். அதனுடன் கைகளின் அசைவிற்காக அப்பகுதியில் உள்ள தசைகள் வலிமை பெறுவதற்காக பிரத்யேக இயன்முறை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் தருவர். இதன் பிறகும் முழுமையான நிவாரணம் கிடைக்காத சிலருக்கு மட்டுமே பிரத்யேக சத்திர சிகிச்சை செய்து நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM