சிலருக்கு முகத்தில் கறுப்பாக ஆங்காங்கே திட்டு திட்டாகவும் சிலருக்கு மூக்கின் மீது அதிகமாகவும் கறுப்பு திட்டு படிந்து காணப்படும். இதனை அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது. இந்தவகை பாதிப்பு, ஒரு முறை தோன்றி விட்டால் அதனை மறைய வைப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.
பெரும்பாலும் இவ்வகை சரும பாதிப்புகள், வெயிலில் வேலை செய்பவர்களுக்கே அதிகம் ஏற்பட வாய்ப்பதிகம். அது மட்டுமின்றி, இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும். அதற்கான காரணம் பெண்களின் ஹோர்மோன் பிரச்சினைகள் தான்.
சரியான முறையில் மாதவிடாய் வராதவர்கள் மற்றும் நாற்பது வயதுக்கு மேல் மாதவிடாய் நின்ற பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த சருமப் பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனை, ஒரே ஒரு பொருளில் எப்படி சரிசெய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
இவ்வகை சரும பாதிப்புக்களுக்கு, உடனடி தீர்வு தரும் அந்த ஒரு பொருள் சாதிக்காய் தான். இதை, தூள் செய்து வைத்துக் கொள்ள முடிந்தால் நல்லது.
செய்முறை:
சாதிக்காயை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளவும். (ஒரு நாள் முழுவதும் காய்ந்தால் நல்லது) அதனை, நன்றாக சிறு சிறு துண்டுகளாக உடைத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சாதிக்காய் தூளை, ஒரு கிண்ணத்தில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி கற்றாளை ஜெல் மற்றும் சுத்தமான காய்ச்சாத பசும்பால் போன்றவற்றை சேர்த்து, நன்றாக பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள்.
இதனை, பாதிப்பு உள்ள இடத்தில் பூசுங்கள்.
பூசிய பின் குறைந்தது ஒரு மணி நேரமாவது அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு முகத்தில் கருந்திட்டுக்கள் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.
இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, முகத்தின் கருந்திட்டுக்கள் மெல்ல மெல்ல மறைந்து, முகம் பொலிவு பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM