மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாவ கடற்படை முகாமில் பயிற்சிபெற்றுவந்த கடற்படை வீரரொருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் கடற்படை முகாமிற்குள்ளேயே இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்ட கடற்படை வீரர் மரத்தில் தொங்கிய நிலையிலேயே பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 19 வயதுடைய மீலாவ குருந்துவத்தையைச் சேர்ந்த தனுஷ்க ரூபசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளின் பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.