நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்து சாதனை

Published By: Robert

19 Jun, 2017 | 04:36 PM
image

தெற்காசியாவில் முதன் முறையாக, சுவாச பிரச்னையால் உயிருக்கு போராடிய இளம்பெண்ணிற்கு, இருபக்க நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை என்ற அரிய சத்திர சிகிச்சையை செய்து, அப்பெண்ணிற்கு மறுவாழ்வு வழங்கி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சாதனை செய்திருக்கிறது. 

இது தொடர்பாக அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘ உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர், ஆன்ட்ரீ, (21). தீவிர சுவாச கோளாறால் சொல்லமுடியாத அவதிக்குள்ளானார். நுரையீரல் ரத்த அழுத்தம் காரணமாக, அவரின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு மோசமடைந்தது. இதனையடுத்துஅவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், சென்னைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த நோயாளி, 2016 அக்டோபரில், சென்னையில் உள்ள எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை பரிசோதித்தபோது, 'பல்மினரி ஹைபர்டென்ஷன்' என்ற நுரையீரல் ரத்த அழுத்த பாதிப்பால், சிறு வயது முதல், மருந்துகள் உதவியுடன் நாட்களை கடத்தியது தெரிய வந்தது. இந்த பாதிப்பு உடையவர்களுக்கு, தூய ரத்தத்துடன், அசுத்த ரத்தமும் சேர்ந்து, உடல் முழுவதும் செல்லும் என்பதால், தோலின் நிறம் நீலமாக மாறிவிடும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்; சில அடிகள் கூட நடக்க முடியாது. இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நோய்க்கு, நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சையே சிறந்த தீர்வு. 

இந்நிலையில், ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, 21 வயது வாலிபரின் நுரையீரலை தானமாக பெற்று, இந்தபெண்ணிற்குப் பொருத்தினோம். இரு பக்க நுரையீரலும் மாற்றப்பட்டது. தற்போது, அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார். 

இவ்வகையினதான அரிய இரு பக்க நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை, தெற்கு ஆசியாவில், சென்னையில் தான், முதன்முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத் தக்கது’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29