பெண்கள் கூந்தலில் பூக்களை சூடிக்கொள்வதன் அறிவியல் உண்மை

28 Mar, 2025 | 12:31 PM
image

மலர் என்று சொன்னாலே மனித மனங்களில் ஒரு உற்சாகம் பிறந்துவிடும். வீதியோரத்தில் பூத்திருக்கும் பூக்கள் முதலாகப் பெயர் தெரியாத காட்டுப் பூக்கள் வரை எல்லாமே அழகுதான். மனிதரின் வாழ்க்கையில் குழந்தை பிறப்பு முதலாக இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பூக்கள் இல்லாமல் எதுவுமில்லை. 

அவ்வாறிருக்க பெரும்பாலும் பெண்கள் கூந்தலில் பூக்களை சூடிக்கொள்வதை அதிகம் விரும்புவார்கள். இது தமிழர் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கமாகும். எந்த ஒரு விஷேட தினங்களிலும் பெண்கள்  கூந்தலில் பூக்களை சூடிக்கொள்வர். ஆனாலும் பெண்கள் கூந்தலில் பூக்களை  சூடிக்கொள்வதன் அறிவியல் உண்மை பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்க மாட்டார்கள். 

நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்கள் கூந்தலில் பூக்களை  சூடிக்கொள்வதிலும்  பல அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளது. 

பூக்களில் உள்ள வாசனை, மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

பூக்களில் உள்ள வாசனை ஆற்றலானது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது. தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது.     

பெரும்பாலான பூக்கள் ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

பொதுவாகவே வாசனை அதிகம் உள்ள பூக்களை வாசனை இல்லாத பூக்களோடு து சேர்த்து கோர்த்து சூடுவதை தவிர்க்க வேண்டும்.  அத்தகைய செயல்கள் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கும்.

ஜாதி மல்லிபூ என்பது பெண்கள் பலர் விரும்பக்கூடிய ஒன்றாகும். இத்தகைய ஜாதி மல்லியை வேறு சில பூக்களுடன் சேர்த்து சூட்டலாம்.  உதாரணமாக மகிழம்பூ, செவ்வந்திப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ, கனகாம்பரம் இப்படியான பூக்களோடு சேர்த்து தலையில் வைத்துக்கொள்ளலாம். சில பூக்களை கற்பூரத்துடன் சேர்த்து வைத்துக்கொண்டால் வாசனை அதிகரிக்கும். 

பெண்கள் குளிப்பதற்கு முன்பு மல்லிகைப்பூவை சூடுவதுதான் சாலச்சிறந்தது. அதே போல குளித்து முடித்த பின்பு வில்வப்பூ, முல்லை போன்றவற்றை சூடலாம். 

குளியலுக்காக எண்ணெய் தேய்க்கும் சமயத்தில் தாழம்பூவை சூட்டலாம். நம் தலையில் சூடிக்கொள்ளும் பூவானது தலையில் மட்டும் தான் இருக்க வேண்டும். 

குளிர்காலங்களில் சூடான பூக்களையும், சூடான காலத்தில் குளிர்ச்சியான பூக்களையும் சூடுவது நல்லது. பெண்கள் தலைவிரி கோலத்தோடு தலைக்கு பூ வைக்காமல் இருக்கவே கூடாது. அது குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்கும். 

பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய சூட்டை குறைக்க வாசம் நிறைந்த பூக்கள் உதவி செய்கின்றது. குறிப்பாக தலையை பின்னி பூ வைக்கக்கூடிய அந்த இடத்திற்கும் கர்ப்பப்பைக்கும் சம்பந்தம் இருக்கிறது. 

வாசனை மிகுந்த பூவை தலையில் சூடிக் கொள்ளும் போது, பெண்களுக்கு இருக்கும் உடல் சூட்டை  சீராக்கப்படுகின்றது. வாசம் இல்லாத பூக்களை பெண்கள் சூடக்கூடாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right