இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நவநாகரீகத்துறையுடன் இணைந்து, நவீன ஆடைத்தெரிவுகளை முழுக்குடும்பத்துக்கும் சகாய விலையில் பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டு, The Outlet Store கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

இல. 142, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 4 எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த காட்சியறையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்நாட்டு மற்றம் சர்வதேச ஆடைத்தெரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், வீட்டுப்பாவனைப்பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள், அணிகலன்கள், ஃபேர்ஃபியும் வகைகள், அழகுசாதனப்பொருட்கள், கைக்கடிகாரங்கள், விளையாட்டுப்பொருட்கள், பாதணிகள் மற்றும் நகைகள் போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘Get Smart for Less’ எனும் தொனிப்பொருளுடன் The Outlet Store அதிகளவு இடவசதியை தன்வசம் கொண்டுள்ளது. சுமார் 15000 சதுர அடி விற்பனை பொருட்களை காட்சிப்படுத்த ஒதுக்கியுள்ளது. நவநாகரீக ஆடைத்தெரிவுகளை கொண்டுள்ளதுடன், தொழில்சார், ஓய்வுநேர, குடும்ப வைபவம், கொண்டாட்டம் போன்ற சகல நிகழ்வுகளுக்கும் பொருத்தமான ஆடைத்தெரிவுகளை கொண்டுள்ளது.

The Outlet Store Pvt Ltd முகாமைத்துவ பணிப்பாளர் ஷர்ஹான் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது முதலாவது காட்சியறையை கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். இதில் சகலருக்குமான ஆடை அணிகலன்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் நகைகள் போன்ற பல்வேறு தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன.”

“வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இந்த அங்குரார்ப்பணம் எம்மைப்பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மேலும் காட்சியறைகளை திறக்க நாம் எண்ணியுள்ளோம்” என்றார்.

கண்கவர் உள்ளகப்பகுதி மற்றும் சர்வதேச சொப்பிங் சூழல் ஆகியவற்றைக் கொண்ட The Outlet Store நவநாகரீகத்தை வெளிப்படுத்தக்கூடியது என்பதுடன், பிரத்தியேகமானதாக அமைந்துள்ளது. செலுத்தும் பணத்துக்கு பெறுமதியை மட்டும் வழங்காமல், முழுக்குடும்பத்துக்குமான உயர் தரம் வாய்ந்த ஆடைத்தெரிவுகளை வழங்குகிறது. அதன் நட்பான ஊழியர்கள், அமைப்பு மற்றும் போதியளவு வாகன தரிப்பிட வசதி போன்றன இனிய சொப்பிங் அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதாக அமைந்திருக்கும். விரைவில் café ஒன்றும் The Outlet Store இல் திறந்து வைக்கப்படவுள்ளது.

பிந்திய செய்திகள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பிலான விவரங்களை அறிந்து கொள்ள www.facebook.com/TheOutletStore.lk  எனும் எமது Facebook பக்கத்தை பின்தொடரவும்.