அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள்.
இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும்.
வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் அல்பனிஸ், “எங்கள் அரசாங்கம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றி அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்,” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM