விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

28 Mar, 2025 | 11:40 AM
image

கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது கிங்டம் எனும் எக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படம் மே மாதம் வெளியாகவுளளது. 

இப் படத்தை தவிர ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கித்ரியன் ஆகியோரின் படங்களிலும் நடிக்கவுள்ளார்.

இதில் ரவி கிரண் கோலா நடிக்கும் படத்துக்கு ரவுடி ஜனார்தன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இப் படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் கதையைக் கேட்டவுடன் கீர்த்தி சுரேஷ் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதியில் விஜய் தேவரகொண்டாவும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி எப்படி அமையப் போகிறது என படம் வெளியானதும் தான் தெரியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right