பெண்களிடையே அதிகரிக்கும் வயிற்றுப் பருமன்

28 Mar, 2025 | 10:06 AM
image

அந்தக் காலப் பெண்கள் தற்போதும் திடமாகவும் உறுதியாகவும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று உடலுழைப்பு.  அதாவது அக் காலத்தில் நவீனத்துவம் இல்லை. இதன் காரணமாக, வீட்டு வேலைகளை அவர்களே செய்து வந்தார்கள்.

உதாரணத்துக்கு அம்மியில் மசாலா அரைத்தனர், ஆடைகளை கைகளினாலேயே கழுவினர், குனிந்து நிமிர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தினர். 

இதன் காரணமாக அவர்களுக்கு உடற்பருமன் போன்ற பிரச்சினைகள் அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால், தற்போது அனைத்துக்குமே இயந்திரங்கள் வந்துவிட்டன. இது பெண்களின் வேலையை இலகுபடுத்திவிட்டன. அதேசமயத்தில் அவர்களின் உடல் உழைப்பையும் குறைத்துவிட்டன. 

உடல் உழைப்பு குறைந்துவிட்டால் அடுத்து எழும் பெரும் பிரச்சினைதான் உடற்பருமன் அதிகமாகுதல். 

இது தொடர்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், பெண்களில் அதிகமானோருக்கு வயிற்றுப் பருமன் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணம், அதிகமான கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல். 

கொழுப்பு உணவுகளை உட்கொள்ளும்போது அந்தக் கொழுப்பை எரிப்பதற்காக நன்றாக வேலை செய்ய வேண்டும். ஆனால், பெண்கள் மத்தியில் அவ்வாறு வேலை செய்யும் ஆற்றல் குறைந்து வருகின்றமையே இதற்கு முக்கிய காரணம். 

வயிற்றுப் பருமன் ஏற்படின், அது மேலதிக நோய்களுக்கு வழிவகுப்பதோடு உடல் தோற்றத்தையும் மாற்றிவிடும். 

இது ஒரு வகையில் மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்லும். எனவே என்னதான் இயந்திரங்கள் நமது வேலையை இலகுபடுத்தும் என்றாலும்கூட தனிப்பட்ட நலன், விருப்பம் போன்றவற்றில் அக்கறை இருப்பின் உடல் உழைப்பை அதிகப்படுத்துவது சிறந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right