இயற்கையான முறையில் முகம் பொலிவடைய ஏபிசி ஜூஸ்

27 Mar, 2025 | 06:28 PM
image

ஏபிசி ஜூஸ் என்பது வைட்டமின் ஏ, பி மற்றும் சி உள்ளிட்டவை அடங்கிய ஆப்பிள், பீட்ரூட், கரட் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யும் ஒரு பானமாகும்.

இந்த ஏபிசி ஜூஸில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க மிகவும் உதவுகிறது.

ஆப்பிளில் இரும்புச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், சோடியம் மேலிக் யூரிக் அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, சி உள்ளிட்ட ஊட்டசத்துக்களும், கரட்டில் கால்சியம், வைட்டமின் ஏ, டி, ஈ  உள்ளிட்ட ஊட்டசத்துக்களும், பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த ஏபிசி ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இயற்கையாகவே முகம் பொலிவடையும்.

சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏபிசி ஜூஸ் மிகவும் பயன்படுகின்றது.

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளவும் ஏபிசி ஜூஸ் உதவுகிறது.

ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஏபிசி ஜூஸ் உதவுகிறது. 

ஏபிசி ஜூஸ் செய்முறை ; ஆப்பிள், பீட்ரூட், கரட் ஆகியவற்றில் சிறிது தண்ணீர் கலந்து அதனை மிக்ஸியில் அரைத்து கொண்டு பின்னர் அதில் சிறிதளவு எலுமிச்சம் பழ சாறு கலந்து பருக வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right