(எம்.ஆா்.எம்.வஸீம்)

நாட்டில் இனவாத பிரச்சினை இல்லை. என்றாலும் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கடைகளுக்கான தீ மூட்டல் மற்றும் பள்ளிவாசல்களுக்கான தாக்குதல்கள் இனப்பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்தையே ஞானசார தேரர் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.