மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் பூத உடல் புதன்கிழமை (26) சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
'தாஜ்மஹால்' என்ற படத்திலிருந்து 'விருமன்' படம் வரை இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த மனோஜ் இரண்டு குறும்படங்களையும் 'மார்கழி திங்கள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, பின்னணி பாடகராகவும் திகழ்ந்த மனோஜ் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு இதய பாதிப்பு தொடர்பான சத்திர சிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் வாரிசு என்ற அடையாளத்துடன் வலம் வந்த மனோஜ் - திடீரென்று உயிரிழந்தமைக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அனைவரும் பாரதிராஜாவை நினைத்து கவலையடைந்தனர். அவரை ஆறுதல் படுத்துவதற்காகவும் தேற்றுவதற்காகவும் நேரில் சென்று தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் நேரில் வருகை தந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
'சக்சஸ்', 'சாதூர்யன்' என இரண்டு தமிழ் படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகையான நந்தனாவை மனோஜ் காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு அர்ஷிதா - மதிவதனி என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM