ஐ. தே. கட்சியின் பொதுச்செயலாளர், தவிசாளர் ஆகியோரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

Published By: Digital Desk 2

27 Mar, 2025 | 03:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பு எவ்வாறு இரு நாடுகளையும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் ஆக்குகிறது என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பில் வியாழக்கிழமை (27) அமெரிக்க தூதுவர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அதன் தவிசாளர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவில், 'கட்சிகளுக்கு இடையிலான எமது ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது.

எமது இரு நாடுகளினதும் ஜனநாயகத்துக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பு எவ்வாறு இரு நாடுகளையும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், வளமானதாகவும் ஆக்குகிறது என்பதைப் பற்றி இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.' எனக் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08