தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் கைது

27 Mar, 2025 | 12:56 PM
image

மாத்தறை – தெவிநுவர பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் புத்தளம் வென்னப்புவை பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

தெவிநுவர பகுதிக்கு கடந்த 21 ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெவிநுவர பகுதியைச் சேர்ந்த கசுன் தாரக்க என்ற 29 வயதுடைய இளைஞனும் யொமேஷ் நதீஷான் என்ற 28 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு சந்தேக நபர்கள் வென்னப்புவை பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:00:06
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள்...

2025-04-24 13:06:21
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03