இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது !

27 Mar, 2025 | 12:39 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால், மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் இந்திய மீன்வர்கள் பதினொரு பேர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நாட்டு கடல் எல்லையைத் தாண்டி உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்து, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (26) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடக்கு கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையானது, கடற்படையின் படகுகளை அனுப்பி மேற்கொள்ளப்பட்டது.

அங்கு, மேலும் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிக் படகொன்றிற்குள் (01) கடற்படையினர் சட்டப்பூர்வமான முறையில் சோதனை செய்து, குறித்த இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினொரு (11) பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்று மற்றும் அங்கிருந்த பதினொரு இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09