மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் - மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை

27 Mar, 2025 | 11:23 AM
image

மீனவர்களுக்கு கடலில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அந்த அனர்த்தங்களுக்கு கூட எவ்வித இழப்பீடுகளும் உரிய முறையில் கிடைப்பதில்லை மேலும் மீனவர்களும் முழுமையாக பாதிக்கப்படுகின்ற காலப்பகுதியில் அவர்களுக்கு உதவித் திட்டங்கள் கூட உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

'மன்னார் மாவட்ட மீனவ சமூகம் எதிர்நோக்கும் சமூக பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த உரிமைக்காய் எங்கள் குரல்' எனும் தொனிப்பொருளில் மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த கருத்து பகிர்வு நிகழ்வு புதன்கிழமை (26) காலை முதல் மாலை வரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மன்னார் மாவட்ட சிரேஷ்ட திட்ட அலுவலர் ஜெபநாதன் டலிமா தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளையோர்களும் கலந்து கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் வருகையை அதிகரித்துள்ள நிலையில் இதனால் இலங்கை மீனவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை மீனவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை மடி தொழில் காரணமாகவும் மீனவர்கள் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படுகின்ற மானிய திட்டம் உரிய முறையில் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு கூட்டங்களில் குறித்த விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.மீனவர்களுக்கு கடலில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அந்த அனர்த்தங்களுக்கு கூட எவ்வித இழப்பீடுகளும் உரிய முறையில் கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.

மேலும் மீனவர்களும் முழுமையாக பாதிக்கப்படுகின்ற காலப்பகுதியில் அவர்களுக்கு உதவித் திட்டங்கள் கூட உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, அவ்வாறான காலப்பகுதியில் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வட கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். எனினும் தென் கடலில் வருகின்ற இந்திய மீனவர்கள் கண்டும் காணாமலும் விடப்படுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகைக்கு எதிராக வடக்கில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அவர்கள் அத்து மீறிய வருகை அதிகரித்துள்ளதாகவும்,மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு...

2026-06-07 13:24:34
news-image

சலே சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக...

2026-06-07 13:16:33
news-image

கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்:...

2026-06-07 13:06:09
news-image

யால பயிர்ச்செய்கைக்குப் போதிய நீர் இருப்பு:...

2026-06-07 13:03:16
news-image

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார்...

2026-06-07 12:55:49
news-image

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம்...

2026-06-07 12:43:47
news-image

13 இலட்சம் இலங்கை மக்களுக்கு உணவு...

2026-06-07 12:35:42
news-image

நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்...

2026-06-07 12:25:07
news-image

மஹர நகரில் மின்சார உபகரண விற்பனை...

2026-06-07 12:18:59
news-image

ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை...

2026-06-07 12:21:20
news-image

அரசாங்கத்தின் விருப்பத்தின் பிரகாரமே பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகம்...

2026-06-07 11:57:55
news-image

வாக்குகளுக்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தி...

2026-06-07 11:53:41