மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளுடன் நேற்று புதன்கிழமை (26) இரவு மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளை ஏற்றி மன்னாரில் இருந்து குருணாகலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் இரவு மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து முருங்கன் பகுதியில் குறித்த வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்தில் 36 பீடி இலை மூடைகள் பொதி செய்யப்பட்டு ஆயிரத்து 115 கிலோ கிராம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்து பின்னர் மன்னாரில் இருந்து குருணாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட இருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 29 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறியுடன் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM