இன்றைய வானிலை

27 Mar, 2025 | 06:37 AM
image

மத்திய,சப்ரகமுவ, மேல்,தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறி்த்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய ,சப்ரகமுவ, ‌மேல்  மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல், காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில  இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் காலி, கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில்  இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெப் வாகனம் குடைசாய்ந்து விபத்து -...

2025-04-21 10:57:11
news-image

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்...

2025-04-21 11:29:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற தேசிய...

2025-04-21 11:22:39
news-image

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 174...

2025-04-21 10:37:57
news-image

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-04-21 11:16:44
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும்...

2025-04-21 11:05:15
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54