விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Published By: Vishnu

27 Mar, 2025 | 01:36 AM
image

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

செவ்வாய்க்கிழமை (25) இவர் மகளை கல்வி நிலையத்திற்கு, நடந்து கூட்டிச் சென்றுகொண்டிருந்தார். இதன்போது பின்னால் வந்த மகேந்திரா வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்தார். பின்னர் சாரதி முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்ன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56