மொரட்டுவையில் உள்ள எகொட உயன ரயில் நிலையத்தில் திடீரென மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததுள்ளது.
இருப்பினும், இடிந்து விழுந்ததில் தெய்வாதினமாக யாரும் விபத்தில் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து புதன்கிழமை (26) இரவு 7.40 மணியளவில் நடந்ததாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
காலி நோக்கி ரயில் சென்ற சிறிது நேரத்திலேயே குறித்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.
மொரட்டுவையிலிருந்து பாணந்துறை வரை செல்லும் பாதை தற்போது தடைப்பட்டுள்ளது, ரயில் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டுமே இயக்கப்படுகிறது.
தற்போது, ரயில்வே துறையின் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் வந்து, ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, வியாழக்கிழமை (27) காலைக்குள் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM