அரச வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக தெரிவித்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சானக்க ஐலப்பெரும கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புதன்கிழமை (26) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
.மத்திய மாகாண சபையின் (ஐக்கிய தேசியக் கட்சியின்) முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீந்திர சானக ஐலப்பெரும அரச வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து இருவேறு சந்தர்ப்பங்களில் ஒன்றரை இலட்சம் ரூபா மற்றும் 2 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே சந்தேக நபர் புதன்கிழமை (26) விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (26) ஆஜர்படுத்தப்பட்துடன் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM