பாரம்பரியமான சீடை பலகாரம்

26 Mar, 2025 | 06:35 PM
image

சீடை பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் ; 

  • 1 1/2  வெள்ளை பச்சை அரிசி
  • 1/2 கப் வெள்ளை அல்லது கருப்பு எள்ளு 
  • 1 கப் வெல்லம்
  • 1/2  துருவிய தேங்காய்
  • எண்ணெய் 
  • 2 தேக்கரண்டி நெய்

செய்முறை ; 

1 1/2  வெள்ளை பச்சை அரிசியை 2 முதல் 3 மணிநேரம் தண்ணீரில் நன்கு ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் ஊற வைத்த வெள்ளை பச்சை அரிசியை மிக்ஸில் இட்டு மாவு பதம் வரும் வரை அரைத்த பாத்திரம் ஒன்றில் மூடி வைக்கவும்.

1/2 கப் வெள்ளை அல்லது கருப்பு எள்ளு ஆகியவற்றை வறுத்து எடுத்து பாத்திரத்தில் உள்ள மாவில் கலந்து 1 கப் வெல்லத்தையும் உருக்கி மாவில் கலந்து சிறிது நேரம் கிளரவும்.

பின்னர் துருவிய தேங்காயையும் 2 தேக்கரண்டி நெய்யையும் மாவில் கலந்து அதனை உருண்டையாக பிடித்து எண்ணெய்யில் இட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right