மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (26) கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த நபர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்து மட்டக்களப்பு மாமாங்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு நித்திரை கொள்ள படுக்கையறைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரை விட்டெழவில்லை எனவும் அவரை எழுப்ப முற்பட்டபோதே அவர் உயிரிழந்தமை தெரியவந்தது எனவும் பொலிஸாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், நீதிமன்ற அனுமதியை பெற்றதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM