நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

26 Mar, 2025 | 07:29 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மாத்திரம் 7 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி மன்றத் இடம்பெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி நாட்டில் இடம்பெறும் தேர்தல்  விதிமுறை  மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 24 ஆம் இரு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 25 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு வன்முறை சம்பவம் உட்பட 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடுமையான வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

மேலும் மாத்தளை  போமலுவ , அகலவத்தை மற்றும் ஹரஸ்கம ஆகிய வீதிகளிலும், யடவத்த நகரிலும் பீரிதேவல வீதியின் இருபுறமும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் மாத்தளை பிராந்திய பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் இரு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவெல வீதி, நிககொல்ல சந்தியிலும் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரலிய பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை மற்றும்  மாத்தளை அலு விஹாரை- சமந்தவ வீதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை ஆகியன தொடர்பிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மூன்று சம்பவங்கள் உள்ளடங்கலாக 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51