இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கியோ இசோமடா (H.E.Akio Isomata) ஊவா மாகாணத்துக்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது மொனராகலை மாவட்டத்தில் கொட்டியாக்கலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 2.5 கி.மீ நீளமான வீதியினை கையளிக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (25) கலந்துகொண்டார்.

இந்த வீதி, அடிப்படை மனித பாதுகாப்புக்கான உதவித் திட்டத்தின் (GGP) கீழ், மக்கள் வசதியாக அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளைக் கொண்ட மொனராகலை மாவட்டம் இலங்கையின் குறைந்த அபிவிருத்தியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது.
கொட்டியாக்கலை கிராமத்தின் குடியிருப்பாளர்கள் அயல் கிராமங்களில் அத்தியாவசிய சேவைகளை அணுக செப்பனிடப்படாத பாதைகளை நீண்ட காலமாக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சீரற்ற வீதிகள் குறிப்பாக மழைக்காலங்களில் பாடசாலைக்கு, வைத்தியசாலைக்கு பொருளாதார நடவடிக்கைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருந்துள்ளது. சீரமைக்கப்பட்ட இந்த புதிய வீதி உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறப்பான போக்குவரத்தை அணுக உதவுவதோடு, சமூகத்தின் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளை மேம்படுத்த உதவும்.
இந்நிகழ்வில், தூதுவர் இசோமடா இலங்கை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஜப்பான் உறுதியாக செயற்படுவதற்கு தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், இலங்கையின் நிலையான அபிவிருத்தியின் அடித்தளம் ஒவ்வொரு தனிநபரின் செயலூக்கமான ஈடுபாடாகும் என்பதை வலியுறுத்தினார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM