கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச் சென்ற லொஸ்ஏஞ்சல்ஸ் - ஷங்காய் விமானம்

Published By: Digital Desk 3

26 Mar, 2025 | 04:10 PM
image

அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கி  வார இறுதியில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்தது. குறித்த விமானத்தின் விமானி கடவுசீட்டை எடுத்துச் செல்ல மறந்துள்ளார். இதனால் உடனே மீண்டும் விமானம் அமெரிக்காவுக்கு திரும்பிச்  சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (22) பிற்பகல் 2 மணிக்கு லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் UA198 விமானம் சீனாவின் ஷங்காய் நகரத்தை நோக்கி 13½ மணி நேர பயணத்தை ஆரம்பித்தது.

புறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் விமானம்  நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் கடவுசீட்டு தன்னிடம் இல்லை என விமானி அறிந்துள்ளார். உடனே விமானம் திரும்பி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் (SFO) தரையிறங்கியுள்ளது.

விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பறந்து சென்று பின்னர் கலிபோர்னியாவுக்குத் திரும்பி சென்றது என விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24  தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பயணி ஒருவர் X தளத்தில், "விமானி தனது கடவுசீட்டை மறந்துவிட்டதால் UA198 சர்வதேச விமான நிலையத்துக்கு திரும்பிச் சென்றது. தற்போது,  6+ மணிநேரம் காலதாமதம். இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த மொத்த தவறுக்கும் நீங்கள் என்ன இழப்பீடு வழங்குகிறீர்கள்?" என பதிவிட்டுள்ளார்.

"எதிர்பாராத பயண இடையூறுக்கு" மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், ஒரு முகவர் மூலம் பயணிகளுக்கு உதவி வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி  அன்று மாலை பாதிக்கப்பட்ட பயணிகளை அழைத்துச் செல்ல புதிய குழுவினரை விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது. பயணிகளுக்கு உணவு  மற்றும் இழப்பீடும் வழங்கப்பட்டது என  யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவை  ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விமானம் புதிய குழுவினருடன் இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஷங்காயில் சுமார் ஆறு மணி நேரம் தாமதமாக தரையிறங்கியதாக CNN தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31
news-image

உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’...

2025-04-18 15:24:04