சமூக ஊடக குழு உரையாடலில் மிக முக்கியமான பாதுகாப்பு தகவல்களை அலட்சியமான விதத்தில் வெளியிட்டுள்ளதை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என ஜனநாயக கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யேமன் மீதான தாக்குதல் திட்டங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் சமூக ஊடக குழு கலந்துரையாடலில் தவறுதலாக ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதி டிஜேவான்ஸ் பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் ஆகியோர் இடம்பெற்றிருந்த சிக்னல் குழு உரையாடலில் தானும் சேர்க்கப்பட்டதாக அட்லாண்டிக் மகசினின் ஜெவ்ரி கோல்ட்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல் திட்டங்கள் குறித்த சில விடயங்களை தான் பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் ஆயுதங்கள் இலக்குகள் தாக்குதல்கள் எப்போது இடம்பெறவுள்ளன போன்ற விபரங்கள் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் தனக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்செயலாகவே தன்னை அந்த குழு உரையாடலில் இணைத்தார்கள் என தெரிவித்துள்ள ஜெவ்ரி கோல்ட்பேர்க் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் வோல்ட்சிடமிருந்தே தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு செயலாளரை தவறுதலாக சிக்னல் உரையாடலில் இணைத்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் இந்த தவறிற்கு தான் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா காங்கிரஸின் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஹக்கீ;ம் ஜெவ்ரீஸ், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தகுதியற்ற பாதுகாப்பு செயலாளர் என வர்ணித்துள்ளதுடன் அவரை பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பென்டகனில் தொடர்ந்தும் முக்கிய பதவியை வகிக்கின்றார்,எங்களின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றார்,உலகெங்கிலும் சீருடையுடன் போராடும் எங்களின் துணிச்சலான ஆண்கள் பெண்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
அவரது நடத்தைமனச்சாட்சியை உலுக்குகின்றது,அமெரிக்கர்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது சட்டத்தை மீறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை குறைத்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரகசிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒரு செயலியை பயன்படுத்துகின்றனர்,அரசாங்கத்திலும் ஊடகங்களிலும் பலர் செயலிகளை பயன்படுத்துகின்றனர்,அவர் தனது தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளார், நல்லவர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM