இலங்கையின் பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் அணியின் துடுப்பாட்ட வீரர் சாருஜன் சண்முகநாதன் இரட்டை சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.
நேற்று (25) நடைபெற்ற சென். பீட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென். பெனெடிக்ட் அணி தலைவரான சாருஜன் சண்முகநாதன் 202 ஓட்டங்களை பெற்றார்.
கொட்டாஞ்சேனையில் சென். பெனெடிக்ட் மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று சாருஜன் 183 பந்துகளில் 202 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமலிருந்தார்,
இதில் இவர் 17 பவுண்டறிகளையும் 8 சிக்ஸ்களையும் அடித்தார்.
சென். பெனெடிக்ட் அணி 7 விக்கெட்களை இழந்து, 410 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது இன்னிங்ஸினை நிறுத்திக் கொண்டது.
இந்த பாடசாலை சுற்று முழுவதும் சென். பெனெடிக்ட் அணி சிறப்பாக விளையாடாமல் தடுமாறி வரும் நிலையில் சாருஜனின் இந்த துடுப்பாட்டம் அணியின் நிலையை மாற்றுவதில் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM