கருங்கடலில் யுத்தநிறுதத்தைகடைப்பிடிப்பதற்கு ரஸ்யாவும் உக்ரைனும் இணங்கியுள்ளன.
சவுதிஅரேபியாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் இந்த வாக்குறுதியை இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளன.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கா இரண்டு தரப்பினரும் தொடர்ந்தும்நிரந்தர சமாதானத்தை நோக்கி பாடுபடவுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கை முக்கியமான வர்த்தக பாதையை திறந்துவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருநாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் எரிசக்தி கட்டமைப்பின் மீதுதாக்குதலை மேற்கொள்வதை தவிர்ப்பது என முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும் உணவு மற்றும் உரதடைகள் பல நீக்கப்பட்ட பின்னரே கருங்கடல் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும்.
கருங்கடலில் தாக்குதல்களை நிறுத்தும் இந்த உடன்பாடு சரியான பாதையிலான நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது பலன் அளிக்குமா என தற்போது தெரிவிக்க முடியாது ஆனால் இவை சரியான சந்திப்புகள் சரியான தீர்மானங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் உக்ரைன் நிலையான சமாதானத்தை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என எவரும் குற்றம்சாட்டமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கருங்கடல் யுத்தநிறுத்த உடன்படிக்கை குறித்த அமெரிக்காவின் அறிக்கை வெளியான பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச உணவு மற்றும் உர வர்த்தகர்களிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட்டாலே கருங்கடல் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என ரஸ்யா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM