இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு சர்வதேச இந்துமத பீடம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சர்வதேச இந்துமத பீடம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்கள் நேற்று 25.03.2025 இறைபதம் அடைந்தார். குருக்கள் அவர்கள் வேத ஆகம பாடசாலையை நிறுவி நூற்றுக்கணக்கான அந்தண சிவாச்சாரியார்களை உருவாக்கியவர். பல கும்பாபிஷேகங்களுக்கு பிரதானமாக இருந்து இறைபணி ஆற்றியவர். அதேவேளை வைதீக உபாத்தியராகவும் அந்தண பெருமக்களுக்கும் ஆன்மிக பணி செய்ததுடன் இந்து மதத்துக்கும் சிறப்பை ஏற்படுத்தியவர்.
அவரது இறப்பு இந்து உலகுக்கு பேரிழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து இந்து மக்களும் எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்வோமாக! என சர்வதேச இந்துமத பீடம் சார்பாக சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM