மறைந்துவிட்டதா சனியின் வளையங்கள்!?

26 Mar, 2025 | 01:35 PM
image

சூரியக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த கிரகமான சனியை (saturn) சுற்றியுள்ள வளையங்கள் தற்போது பூமியின் பார்வையில் மறைந்திருப்பதாக In-the-Sky.org தெரிவித்துள்ளது. 

சனி கிரகத்துக்கு அழகே அதன் வளையங்கள்தான். விஞ்ஞானிகளையும் வான ஆராய்ச்சியாளர்களையும் மனிதர்களையும் இன்று வரை ஆச்சரிய மிகுதியால் கவர்ந்திழுக்கும் சனி வளையங்கள் இல்லாமல், அந்த சனி கிரகத்தை பார்த்தால் எப்படியிருக்கும்?! 

இந்த அறிவியல் ஆச்சரியங்கள் நிறைந்த காட்சியை 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் மனிதர்களால் பார்க்க முடிந்திருக்கிறது. 

சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் வியாழனுக்கு அடுத்ததாக உள்ள மிகப் பெரிய கிரகமாக மட்டுமன்றி, சுற்றிலும் அதிசயிக்கத்தக்க வளையங்களை கொண்ட கிரகமாகவும் சனி விளங்குகிறது. 

சனி கிரகத்துக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன. 

பில்லியன் கணக்கான பனிக்கட்டி, பாறைத்துண்டுகள், தூசுகளாலான இந்த வளையங்களை பூமியிலிருந்து பார்க்கும்போது மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாதது போன்ற மாயக் காட்சியை தரக்கூடிய இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது. 

சனி பூமியுடன் தற்போது 26.7 டிகிரி கோணத்தில் சாய்ந்த அச்சில் சுழன்று வருவதால் அதன் வளையங்கள் நம் கண்களுக்கு தென்படாதது போலிருக்கும். 

பூமி சனியின் வளையத் தளத்தை கடக்கும்போது இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. "ring plane crossing" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு 13 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலவும் என தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, சனி வளையங்கள் மறையும் இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) இலங்கை நேரப்படி இரவு 9.34 மணிக்கு இடம்பெறத் தொடங்கியது.

சனியின் வளையங்கள் மனிதர்களின் கண்களுக்கு தென்படாததால் அவ்வளையங்கள் அழிந்துவிட்டன என்பது அர்த்தமல்ல. இது வெறும் மாயக் காட்சி மட்டுமே. 

சனி வளையங்கள் பூமியின் பார்வையில் மறைந்திருக்கும் நிகழ்வு கிட்டத்தட்ட 2032 வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இந்த நாட்களில் மத்திய - வடக்கு அட்ச ரேகைகளில் வசிப்பவர்களுக்கு, அதிகாலை வேளைகளில் சனி சூரியனுக்கு மிக அருகில் தோன்றும் எனவும்  அதேவேளை மத்திய தெற்கு அட்சரேகைகளில் வசிப்பவர்களால்  வளையங்கள் இல்லாமல் சனி கிரகத்தைப் பார்க்க முடியும் எனவும் Space.com தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள், மெட்டா நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது...

2025-04-24 15:54:20
news-image

பாகிஸ்தானில் பனிக்கடற்கரடிகளை பாதுகாக்க AI தொழில்நுட்பம்

2025-04-22 12:17:42
news-image

'புதிய நிறத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் 

2025-04-21 11:19:45
news-image

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண...

2025-04-15 09:32:38
news-image

ஜிப்லியால் சட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை...

2025-04-02 17:09:37
news-image

இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீற்றர்...

2025-03-31 12:39:07
news-image

எக்ஸ் தளத்தை விற்பனை செய்தார் எலான்...

2025-03-30 09:46:36
news-image

செயற்கை நுண்ணறிவால் பதற்றத்தை உணர முடியுமா...

2025-03-29 14:44:37
news-image

மறைந்துவிட்டதா சனியின் வளையங்கள்!?

2025-03-26 13:35:10
news-image

உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய ஏர்போட்கள் ;...

2025-03-19 12:17:11
news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23