மில்கோ நிறு­வ­னத்தை தனி­யா­ருக்கு விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. அத­னால்தான் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மா­வுக்­கான வரியை குறைத்­துள்­ளது என எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீ.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்­சியின்  பொரு­ளா­தார ஆய்­வு­பி­ரிவு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

தேசிய பால் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்கும் பால் உற்­பத்­தி­யா­ளர்­களின் வாழ்­வா­தா­ர­த்தை அதி­க­ரிப்­ப­தற்கும் மஹிந்த ராஜபக் ஷ  அர­சாங்­கத்தில் நான் கால்­நடை அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருக்கும் போது நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். குறிப்­பாக பால் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­துடன் மில்கோ நிறு­வ­னத்தை நல்ல நிலைக்கு கொண்­டு­வந்தோம். அத்­துடன் ஒரு லீற்றர் பாலுக்­கான விலையை 67ரூபா­வாக நிர்­ண­யித்­தி­ருந்தோம்.

மேலும் பாலின் தேவைப்­பாட்டை மக்கள் மத்­தியில் அதி­க­ரிக்­கச் ­செய்தோம்.  குறிப்­பாக காலையில் கடைக்கு வரு­ப­வர்கள் பால் போத்தல் ஒன்றை கட்­டாயம் எடுத்­துச்­செல்லும் நிலை அன்று ஏற்­பட்­டி­ருந்­தது. வைத்­தி­ய­சா­லை­களில் பாலின் தேவை அதி­க­ரித்­தி­ருந்­தது. அதே­போன்று உற்­பத்தி அதி­க­ரித்­த­போது பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வச பால்­கோப்பை வழங்கி தேசிய பால் உற்­பத்­தி­யா­ளர்­களை நஷ்­டப்­ப­டுத்தவில்லை.

ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தபின்பு தேசிய பால் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அத்­துடன் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மா­வுக்­கான வரியை  45 ரூபா வரை குறைத்­துள்­ள­துடன் தேசிய ரீதியில் உற்­பத்­தி செய்யப்பட்ட பாலை விலைக்கு வாங்­காமல் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பாலைப் பெறும் வேலைத்­திட்­டத்தை  மேற்­கொண்டு வரு­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக மில்கோ நிறு­வ­னத்தின் பால் லீற்றர் கணக்கில் நாளாந்தம் கொட்­டப்­ப­டு­கின்­றது.

எனவே அர­சாங்கம் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனைக் காரணமாக காட்டி அந் நிறுவனத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தையே மேற்கொண்டு செல்கின்றது. இதனால் தேசிய பால் உற்பத்தியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.