அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு 

26 Mar, 2025 | 12:36 PM
image

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (25) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் இணைந்துகொண்டனர். 

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள்  மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் உற்பத்தி, அதன்  ஏற்றுமதி போன்றவற்றின் நிலைகள் குறித்து இதன்போது விரிவாக  கலந்துரையாடப்பட்டது. 

மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுத் திட்டம், பயனாளிகள் தெரிவு முறை, தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாகவும் பேசப்பட்டன. 

தற்போது அரசு வறிய மாணவர்களுக்கான சத்துணவு வழங்குவது தொடர்பாகவும் அமெரிக்க தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

அதேவேளை, அமெரிக்க அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிவருகின்றமையும் நினைவுகூரப்பட்டதோடு, மலையக மக்களுக்கான  உதவிகள், அவர்களுக்கான சேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. 

மேலும், இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக அமைச்சர் முதலானோரிடம் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35