போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில் காணப்பட்ட சிங்கங்கள் - பிரிட்டனில் நிரந்தர புகலிடம்

26 Mar, 2025 | 12:21 PM
image

உக்ரைனில் மீட்கப்பட்ட ஐந்து சிங்கங்களிற்கு இங்கிலாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் சர்வதேச மீட்பு முயற்சியின் மூலம் இந்த சிங்கங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன என தெரிவித்துள்ளது

இது தொடர்பில் இன்டிபென்டன்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது'

ஆபிரிக்க ஆண் சிங்கம்ரோரி பெண்சிங்கங்கள் அமானி லிரா வன்டா யுனா ஆகியன உக்ரைனின் போர்க்களத்திற்கு அருகில் மிகவும் பயங்கரமான நிலையை எதிர்கொண்டன.

பெல்ஜியத்தின் தற்காலிக தங்குமிடத்திலிருந்து 12 மணிநேரம் பயணம் செய்து அவை பிரிட்டனின் கென்ட் ஆஸ்போர்ட் அருகில் உள்ள பி;க்கட் சரணாலயத்தி;னை சென்றடைந்துள்ளன.

இந்த சிங்கங்களின் தனிப்பட்ட கதைகள் புறக்கணிப்பு கைவிடப்படல் போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளன.

யூரி தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம்திற்கு அருகில் ஏவுகணை சிதறல்கள் விழுந்து வெடித்ததால் அது அதிர்ச்சிக்குள்ளாகியது,ரோரி ஒரு தனியார் மிருகக்காட்சி சாலையில் துன்புறுத்தலிற்குள்ளானது,அமாலியையும்,லிராவையும் சுற்றுலாப்பயணிகளுடன் படம் எடுப்பதற்காக பயன்படுத்தினார்கள்,வன்டா ஒரு தொடர்மாடிக்குள் வசிக்கநிர்ப்பந்திக்கப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் காணப்ட்டது.

இந்த ஐந்து சிங்கங்களையும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திலிருந்து மீட்டோம் என பிக்கட் சரணாலயத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கமரோன் வைட்னால் தெரிவித்தார்.

இந்த சரணாலயத்தின் சிங்கங்கள் மீட்பு நிலையம்,மீட்கப்பட்ட விலங்குகளிற்கு புகலிடம் அளிப்பதை நோக்கமாக கொண்டது.சிங்கங்கள் தங்களின் பயங்கரமான அனுபவங்களில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பத்தை இந்த நிலையம் வழங்குகின்றது.

நட்டாலியா பொப்போவா என்ற உக்ரைனிய பெண்ணிண் வனவிலங்குகள் மீட்பு நிலையமே இந்த சிங்கங்களை மீட்டிருந்தது.

ரஸ்யாவின் படையெடுப்பின் பின்னர் கைவிடபட்ட நூற்றுக்கும் மேற்;பட்ட செல்லப்பிராணிகள் மிருகாட்சி சாலை விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

உக்ரைனின் தலைநகர் அருகில் உள்ள குதிரைகள் லாயத்தை  இவர்  வனவிலங்குகள் மீட்பு நிலையமாக மாற்றியமைத்துள்ளார்.இங்கு கொண்டுவரப்படும்  நூற்றுக்கணக்கான விலங்குகளை அவர் வெளிநாடுகளிற்கு சிகிச்சைக்காக அனுப்புகின்றார்.

சரணலாயத்தி;ல் சிங்கங்களை வைத்திருப்பதற்கான இடமில்லாத போதிலும் அந்த ஐந்து சிங்கங்களையும் பிரிட்டனிற்கு கொண்டுவருவது குறித்து விட்னோல் உறுதியாகயிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31