இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை இலங்கையில் அனுபவிக்கமுடியும்.
மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்தில் இருந்து அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக கேபிள் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டவுள்ளது.
இந்த கேபிள் கார் திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டம் இவ் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) அம்புலுவாவ திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் அம்புலுவாவ அறக்கட்டளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுராத ஜெயரத்னவை சந்தித்துள்ளார்.
இதன்போது, "இந்த திட்டம் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்திருந்தது. ஒரு கனவாக வெகு தொலைவில் இருந்த இந்த திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களால் நிஜமாகிவிட்டது. நுவரெலியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கம்பளையில் பயணத்தை ஆரம்பித்து அம்புலுவாவவில் கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில், கம்பளை ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு கேபிள் கார் சேவை விரிவுபடுத்தப்படும்," என அநுராத ஜெயரத்ன சீனத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.
கம்பளை உலகின் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM