மாடுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற தலைமறைவாக இருப்பதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இதன்போது வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.எம் . ரத்நாயக்க கைப்பற்றப்பட்ட 20 மாடுகளையும் அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்காமல் கடத்தல்காரர்களிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டது.
ஆனால் வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற தலைமறைவாக உள்ளார்.
எனவே வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM