இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­னால் ­பொ­து­பல சேனாவே உள்­ளது.  அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். 

மாத்­தறைப் பிர­தே­சத்தில் விகா­ரை­யொன்றின் கட்­டடம் ஒன்றைத் திறந்து வைத்து நேற்று முன்­தினம்   உரை­யாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறு­கையில்,

பெளத்த மதத்தை பாது­காத்து நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை உறு­திப்­ப­டுத்­து­வதை தவிர்த்து  பெளத்த  மதத்­துக்­கா­கவும் இனத்­துக்­கா­கவும் குரல் எழுப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கு    சட்டம் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய சட்­டங்­களை  கொண்­டு­வந்து நாட்டில்  மதம், இனம் என்­ப­வற்­றி­லி­ருந்து மக்­களைத் தூரப்­ப­டுத்­து­வ­தற்­கான  முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் போது சம­யத்தின் மீதுள்ள பற்று அதி­க­ரிக்­குமே தவிர  அது குறை­யாது. 

இன்றும் அதுவே இலங்­கையில் இடம்­பெற்று வரு­கின்­றது. பெளத்த மதத்தை காப்­பாற்­று­வதை தவிர்த்து இந்த நாட்டில் பௌத்தம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த கார­ணத்­தினால் தான் நாட்டில் பெளத்த மத போராட்­டங்கள் வெடிக்க ஆரம்­பித்­துள்­ளன.  அதேபோல் பெளத்த பிக்­கு­களே இந்த அர­சாங்­கத்­தி­னால் அதிகம் துன்­பு­றுத்­தப்­ப­டு­ப­வர்கள். அதேபோல் இந்த நாட்டை கட்டிக் காப்­பாற்­றிய எமது பாது­காப்பு படை­யினர் அடுத்­த­ப­டி­யாக கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர்.

நாட்டில் இன­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு தேவை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும்இ தேவைப்­படின் புதிய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யா­வது இன­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் அறி­வித்­தி­ருந்­தமை எனக்கு நினைவில் உள்­ளது. 

இந்த நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை உறு­திப்­ப­டுத்­து­வதை தவிர்த்து பெளத்த  மதத்­துக்­கா­கவும்இ இனத்­துக்­கா­கவும் குரல் எழுப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கு   சட்டம் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.  

இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்னால் பொது­பல சேனாதான் உள்ளது என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது. அர­சாங்­கத்தின் அடைக்­கலம் இல்லாவிடின் ஞானசாரர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அவர் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார். 

ஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளையும் பரப்பி வருகின்றது  என்றார்.