அபிலாஷனி லெட்சுமன்
வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இவ்வருடமும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பு பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் மைதானத்தில் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்டது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியானது பாடசாலையின் அதிபர் அருந்ததி ராகவிஜயன் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் பழைய மாணவியும் களுத்துறை போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான வைத்தியர் பாத்திமா ஜுமைலா ஜுனைட் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.
ஐந்து இல்லத்தலைவர்களின் பங்குபற்றலோடு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு இல்ல விளையாட்டு போட்டியானது ஐந்து இல்லங்களுக்கிடையில் ஆரம்பமானது.
இதன்போது தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட சுவட்டு ஓட்ட நிகழ்ச்சிகள் , 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் , பந்து சேகரித்தல் ,பந்தை சமநிலையில் பேணல், பந்தை தலைக்கு மேல் கடத்தல் என்பன நிகழ்த்தப்பட்டது.
அத்தோடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவத்தலைவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள், மற்றும் பெற்றோர்கள் , மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுபோட்டிகள் போன்ற களிப்பூட்டும் வகையிலான விளையாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தியமை சிறப்பம்சமாகும்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் , கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
( படப்பிடிப்பு – எஸ்.எம்.சுரேந்திரன் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM