வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு தொடர்பில் ஏற்கனவே செய்யப்பட்ட உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளது என வெளியாகும் தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இதன் காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இலங்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்இஎன தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை கைவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது அது இலங்கை ஒப்பந்தங்களை மதிக்காத நாடு என்ற அவப்பெயரை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மருத்துவமனையில் உள்ள நோயாளி என கருதவேண்டும் அக்கறை செலுத்தவேண்டும் நோயாளியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த வயர்கள் சிலவற்றை அகற்றிவிட்டனர்ஆனால் நோயாளி இன்னமும் தீவிரசிகிச்சை பிரிவிலேயே உள்ளார்
நாங்கள் என்ன செய்தோம் என்றால் ஸ்திரதன்மையை ஏற்படுத்தினோம்அதனை தவிர வேறொன்றுமில்லை நோயாளி இன்னமும் மருத்துமவனையிலிருந்து வீடு திரும்பவில்லைநோயாளியை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியது.
தற்போது நோயின் பிடியிலிருந்து மீள்வதே நோக்கமாகயிருக்கவேண்டும் தீவிர கிசிச்சை பிரிவிலிருந்து வெளியேறுவதே நோக்கமாகயிருக்கவேண்டும்.
இதனை சாதிப்பதற்காக எனது அரசாங்கம் ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த சட்டங்கள் முன்னோக்கி செல்வதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன,ஆனால் உண்மையான பொருளாதார முன்னேற்றத்தையும் தலாவருமான அதிகரிப்பையும் ஏற்படுத்துவதற்கு எங்களிற்கு பொருளாதார அபிவிருத்தி அவசியம்,அதனை சாதிப்பதற்கு மூலதனமும் தொழில்நுட்பமும் அவசியம்,எங்களிடம் இந்த இரண்டு விடயங்களும் இல்லை,அப்படியானால் நாங்கள் அவற்றை சீனா இந்தியா வியட்நாம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தே கொண்டுவரவேண்டும்.
இந்த நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், அரசாங்கம் எரிசக்தி துறை தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வது குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்களை குறைப்பது குறித்து தெரிவிக்கின்றது,நாங்கள் இதனை கண்மூடித்தனமாக செய்தால் முதலீட்டாளர்கள் இலங்கை ஒரு நம்பமுடியாத நாடு என கருதும் நிலையேற்படும்,அவர்கள் இங்கு முதலீடு செய்யமாட்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM