யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் புதன்கிழமை (26) கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீரப்புபோராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பொழுது ''இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு'' எனும் தொனிப்பொருளில் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நியாயமற்ற தேர்வு பரீட்சை முறையை உடனடியாக நிறுத்து, ஆட்சி மாறியது போல பட்டதாரிகளின் வாழ்க்கை மாறுமா, நியாயமற்ற தேர்வு பரிட்சையால் கேள்விக்குறியாகப்பட்டதாரிகளின் கனவு, தாதியர் பட்டதாரிகளை உடனடியாக அரச சேவைக்கு அமர்த்து, மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞான பட்டதாரிகளை உடனடியாக வேலைக்கு அமர்த்து ஆகிய கோஷங்களை எழுப்பப்பட்டன.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கவனயீரப்பு போராட்டம் தொடர்பில் சுகாதார விஞ்ஞான பீடம் கிஸ்னுயன் தெரிவிக்கையில், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து தாதியியல், மருந்தாக்கவியல், மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானம், ஆகிய பதவி நிலை வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்களை உள்ளீர்ப்பதற்காக அரச பல்கலைக்கழகங்களில் முன்னபோதும் இல்லாத வகையில் பொது உளர் சார்பு பரீட்சை இணை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தப் பரீட்சை எமக்கு தேவையற்ற ஒன்று எனவும் நான்கு வருடங்கள் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற உமாக்கு வேலை வாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறான தடை தாண்டல் பரீட்சைகள் எங்களுடைய தகுதியை தீர்மானிப்பதாக அமையவில்லை.
மேலும் இதுவரை காலமும் பாடப்பெறுமதிக்கான தரப்புள்ளி சுட்டெண் ( GPA) இன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகம் மூலம் பதவி நிலை வெற்றிடங்கள் நிரப்பப்படும். ஆனால் தற்பொழுது ஜிபிஏ சுட்டங்களை கொண்டிருக்காத தகுதியற்றவர்கள் கூட வேலை வாய்ப்பு இணைத்துக்கொள்ளப்படலாம் ஆகவே இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM