பாதெனிய, ஸ்ரீ சுனந்த மகா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்புச் செயற்றிட்டத்தில் பங்களிப்பு செய்த எல்.பீ. ஃபினான்ஸ் 

26 Mar, 2025 | 02:11 PM
image

பேண்தகு தன்மை மற்றும் சமூகசேம நலனை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்ற முறையில்,எல்.பீ. ஃபினான்ஸ் நிறுவனம், NIDA பவுண்டேஷனின் ஒத்துழைப்புடன் பாதெனியவிலுள்ள ஸ்ரீ சுனந்த மகா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு செயற்றிட்டம் ஒன்றினை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இப் பிரதேசத்தில் நீண்ட காலமா கஆரோக்கியத்திற்குக் கேடாக நிலவி வரும் கடின நீர் பிரச்சினையைத் தணித்து, சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதே ரூ.1.6 மில்லியன் செலவிலான இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

ஸ்ரீ சுனந்த மகா வித்தியாலயத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக கடின நீரையே பருக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி வந்தனர். கடினநீர்,சிறுநீரக நோய்களுக்கும் வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கும் வழிகோலக்கூடியதாகும்.

இந்த முக்கியமான பிரச்சினையை அறிந்த எல்.பீ. ஃபினான்ஸ் முன்னேற்றகரமான பின்னோக்கிய சவ்வூடு பரவல் (Reverse Osmosis – RO)தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றினை இப் பாடசாலையில் நிறுவியுள்ளது.

இதன் பயனாக, இப் பாடசாலைமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்னும் பலஆண்டுகளுக்குச் சுத்தமாகமற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்