களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ; படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

26 Mar, 2025 | 10:38 AM
image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 48.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று புதன்கிழமை (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய 46 வயதுடைய பேராசிரியர் ஒருவர் தனது மனைவி, 3 பிள்ளைகள் மற்றும்  மனைவியின் தாய் மற்றும் சகோதரனுடன் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றுவிட்டு வேனில் மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர்.

இதன்போது இந்த வேனானது வீதியில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தின் போது, வேனின் பயணித்த களனி பல்கலைக்கழக பேராசிரியரும், அவரது மனைவியும், 3 பிள்ளைகளும் மனைவியின் தாய் மற்றும் சகோதரனும் படுகாயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  களனி பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்தார்.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த களனி பல்கலைக்கழக பேராசிரியரின் மனைவியும் , 3 பிள்ளைகளும் , மனைவியின் தாய் மற்றும்சகோதரனும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் களனி பல்கலைக்கழக பேராசிரியரின் 3 பிள்ளைகளும் மனைவியின் தாயும் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனைவியின் சகோதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்யில் சிகிச்சை பெற்ற வந்த களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரின் மனைவியும் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43