கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெஸ்­பேவ வீதியின் நுகே­கொட - சூரி­ய­வெவ மாவத்­தையின் அரு கில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பகு­தியில் பெண்­ணொ­ருவர் கழுத்­த­றுத்து கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். 

நேற்றுமுன்தினம் இரவு 8 மணி­ய­ளவில் 119 அவ­சர அழைப்பு இலக்கம் ஊடாக பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப் ­பெ­ற்ற தக­வ­லுக்கு அமை­வா­கவே இந்த சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. கொலை செய்­யப்­பட்ட பெண் 25 வய­தான மத்­து­கம பகு­தி­யை சேர்ந்த பிரி­யங்கா சங்­கல்­பனி குண­சிங்க எனும் அழகுக்கலை நிலையம் ஒன்றில் சேவை­யாற்­று­பவர் என பொலிஸார் தெரி­வித்­தனர். 

காதல் பிரச்­சினை கார­ண­மாக இந்த கொலை இடம்­பெற்­றுள்­ள­துடன் கொலை  செய்­யப்­பட்ட பெண்ணின் காதலன் என நம்­பப்­படும் இளைஞன் கொலைக்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் கத்­தி­யுடன் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்த நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் சந்­தேக நபர் பொலி­ஸா­ருக்கு ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கி­யுள்ள நிலையில் மேல­திக விசா­ர­ணை­களை கொஹு­வலை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

'கொலை செய்­யப்­பட்ட பெண் தனது காதலி எனவும் அவரை மோட்டார் சைக்­கிளில் ஏற்­றிக்­கொண்டு பழைய கெஸ்­பேவ வீதியில் மைதானம் அருகில் சென்­ற­தா­கவும் அங்கு அவ­ருடன் ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கத்­தினால் அவரை கழுத்­த­றுத்து கொலை  செய்­த­தா­கவும் சந்­தேக நபர் வாக்கு மூலம் அளித்­துள்ளார். தமது காத­லுக்கு இடையே மற்­றொரு நபரின் காதல் விவ­கா­ரமும் தொடர்­பு­பட்­டதால் இந்த வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­ட­தாக சந்­தேகநபர் வாக்குமூலம் அளித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

எவ்­வா­றா­யினும் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் தலைப் பகு­தியை அண்­மித்து மட்டும் 12 வெட்டுக் காயங்­களும் உடல் முழு­வதும் 20 வெட்டுக் காயங்கள் வரை காணப்­ப­டு­வ­தாக விசா­ரணை அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

சடலம் மீட்­கப்­பட்ட இரவில் ஸ்தலத்­துக்கு பொலிஸார் விசா­ர­ணைக்­காக சென்­றி­ருந்த போது இரத்தம் சொட்டும் கத்­தி­யுடன் சந்­தேகநபர் பொலிஸில் சர­ண­டைந்ததைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கங்கொடவில நீதிமன் றில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.