'மோகன்லால் நடித்திருக்கும்' லூசிபர் 2- எம்புரான்' திரைப்படத்தை பட மாளிகையில் தமிழிலேயே பார்த்தால் சிறந்த அனுபவம் கிடைக்கும்' என அப்படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லூசிபர் 2 -எம்புரான்' எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாறன், அபிமன்யு சிங், சுராஜ், கிஷோர், சானியா ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் - ஸ்ரீ கோகுலம் மூவிஸ் - லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தை பற்றி இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறன் பேசுகையில், '' லூசிபர் படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த பாகம் பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதற்கு தயாரிப்பாளர்களும், மோகன் லாலும் காரணம்.
முரளி கோபியின் கதை திரைக்கதையில் இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்கள் இப்படத்தை தமிழிலேயே பார்க்கலாம். அந்த அளவிற்கு துல்லியமாக டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM