அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (25) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்பாவல கிரலோகம பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் விகாராதிபதியான 69 வயதுடைய விளச்சிய பேமரத்தண எனப்படும் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள விகாராதிபதியை சந்திப்பதற்காக வேண்டி சென்றிருந்த நபர் ஒருவரும் வேறு விகாரையொன்றின் விகாராதிபதி ஒருவரும் அவரை சந்திக்க விகாரைக்கு சென்றிருந்தபோது விகாராதிபதி கொலைசெய்யப்பட்டிருப்பதை கண்டு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
சம்பவத்தில் உயிரிழந்த விகாராதிபதியிடம் முச்சக்கர வண்டியொன்று இருந்துள்ளதுடன் அதற்கு சாரதி ஒருவரும் இருந்துள்ள நிலையில் முச்சக்கர வண்டியுடன் சாரதியும் விகாரையில் இருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அவர் பற்றிய தகவல்கள் மற்றும் இக்கொலையினை யார் செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரிய வராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களினால் ஆரம்பகட்ட நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக வேண்டி சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மஹிந்த ரணவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM